உதயநிதி போட்டோவை முதுகில் ஒட்டிக்கொண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.
உதயநிதி போட்டோவை முதுகில் ஒட்டிக்கொண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Published on

சென்னை,

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் அசோக்நகர் காசி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் போட்டோவை முதுகில் ஒட்டிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com