"ஜெயிலர் 2" படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்


ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்
x
தினத்தந்தி 13 April 2025 8:06 PM IST (Updated: 18 April 2025 1:59 PM IST)
t-max-icont-min-icon

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.

கேரளா,

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதாவது, கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலம் அட்டப்பாடிக்கு சென்ற ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தனது காரில் இருந்து வெளியே வந்த ரஜினி, கையை அசைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். அதன் பிறகு காரில் ஏறி, தங்கும் விடுதிக்கு அவர் சென்றார்.

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story