வீட்டுக்கு வெளியே குவிந்த ரசிகர்கள்; மகனுடன் ரம்ஜான் வாழ்த்து கூறிய நடிகர் ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் வீட்டுக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுடன் வந்து ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.
வீட்டுக்கு வெளியே குவிந்த ரசிகர்கள்; மகனுடன் ரம்ஜான் வாழ்த்து கூறிய நடிகர் ஷாருக் கான்
Published on

புனே,

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நடிகர் ஷாருக் கானின் மும்பை நகரில் அமைந்த மன்னத் இல்லத்திற்கு வெளியே இன்று காலையில் இருந்து ரசிகர்கள் குவிய தொடங்கி விட்டனர்.

அவர்கள் தங்களது விருப்பத்திற்குரிய நடிகரை காண்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து, ரசிகர்களை பார்க்க நடிகர் ஷாருக் கான் வீட்டு பால்கனிக்கு வந்து உள்ளார். வெண்ணிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் என எளிய உடையில் தோன்றினார்.

அவருடன் இளைய மகனான ஆபிராமும் காணப்பட்டார். கூடியிருந்த கூட்டத்தினரை நோக்கி வழக்கம்போல் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆபிராமும் கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் ஷாருக் கான் ரம்ஜான் பண்டிகையின்போது, ஆண்டுதோறும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் வைத்து உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், இந்த பண்டிகை நாளில் உங்கள் அனைவரையும் காண்பது இனிமையாக உள்ளது. இந்த அன்பை பரவ செய்வோம். கடவுளின் ஆசிகள் நம் அனைவருடனும் இருக்கட்டும் ரம்ஜான் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். அவரது இந்த பதிவுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com