பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்த ரசிகர்கள்; திரையரங்கில் தீ பிடித்ததால் பரபரப்பு


பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்த ரசிகர்கள்; திரையரங்கில் தீ பிடித்ததால் பரபரப்பு
x

ஆர்வம் மிகுதியில் ரசிகர்கள் பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்ததால் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான படம் ‘தி ராஜாசாப்’. மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

பான்இந்தியா படமாக பல மொழிகளில் வெளியான இந்த படம் ஒடிசாவில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக பிரபாஸ் ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டரில் திரண்டனர்.

படம் திரையிடப்பட்டு பிரபாஸ் திரையில் தோன்றியதும் அவரது ஏராளமான ரசிகர்கள் விளக்குகளை ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் அவரது படத்திற்கு ஆரத்தி எடுத்தும் ஆரவாரம் செய்தனர். அப்போது திடீரென தியேட்டருக்குள் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்து தப்பித்தால் போதும் என்று தெறித்து ஓடினர்.

உடனடியாக தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. ஆர்வம் மிகுதியில் ரசிகர்கள் பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்ததால் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story