ரசிகர்கள் வேண்டுகோள்.. 'கூலி' பட இடைவேளையில் நாகார்ஜுனாவின் ஹிட் பாடல்


Fans request.. Nagarjunas hit song during the intermission of the film Coolie
x

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை,

ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. நாகார்ஜுனாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்நிலையில், படத்தின் இடைவெளியில், நாகார்ஜுனாவின் ஹிட் பாடலை திரையிட ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, தியேட்டர் உரிமையாளர்களும் அந்தப் பாடலைப் போட்டு நாகார்ஜுனாவின் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ் நாட்டில் சில பகுதிகளில் கூலி திரையிடப்படும் திரையரங்குகளில் நாகார்ஜுனாவின் ரட்சகன் படத்திலிருந்து 'சோனியா சோனியா' பாடலை திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். தியேட்டர் உரிமையாளர்களும் இடைவேளையின்போது அந்தப் பாடலை போட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.

கூலி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை, இது மொத்தம் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story