ரசிகர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - அஜித்குமார்

ரசிகர்களும் தங்​கள்​ வாழ்க்​கை​யில்​ முன்​னேற விரும்​பு​கிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.
ரசிகர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - அஜித்குமார்
Published on

நடிகர் அஜித்குமார், குட்பேட் அக்லி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் தனது அணியினருடன் கலந்து கொண்ட அவர் இப்போது, 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த கார் பந்தயத்துக்கு நடுவே அஜித்குமார் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதேபோல அவர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அனைவருக்கும் சிறந்த மற்றும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com