

பெங்களூரு,
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ஜூனியர் என்.டி.ஆர்., இவர், பெங்களூரு மகாதேவபுராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் பங்கேற்க நேற்று மதியம் வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்தனர். ஆயிரக்கணக் கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் புகுந்ததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இத னால் தள்ளுமுள்ளு உண்டானது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த ரசிகர் கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதன் காரணமாக அவர்கள் ' நாலாபுறமும் கலைந்து ஓடினார்கள். இதில், சிலருக்கு காயமும் ஏற்பட்டது. இந்த களேபரத்தில் அங்கிருந்த தானியங்கி படிக்கட்டு உடைந்து நொறுங்கி யது.