

சென்னை,
திரை உலகில் உலகநாயகன் எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.
நடிகர் கமலஹாசன் அரசியல் பயணம் குறித்து நடிகையும், மகளுமான ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது:
எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு முழு ஆதரவு உண்டு. அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.