மலையாள நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு தேசிய விருது; சிறந்த தமிழ்படம் டூ லெட்

65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்து உள்ளார். #ParvathiMenon #TOLET
மலையாள நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு தேசிய விருது; சிறந்த தமிழ்படம் டூ லெட்
Published on

புதுடெல்லி

மலையாள நடிகை பார்வதி மேனன் மலையாளத்தில் சிலபஸ் என்ற படத்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் பூ, மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார். சிறப்பு பிரிவில் பார்வதி மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்து வருகிறார்.

* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

* சிறந்த படம் பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்

* சிறந்த இந்திப்படம் நியூட்டன்

* சிறந்த தமிழ் படம் TO LET

* சிறந்த தெலுங்கு படம் டாப்சி, ராணா நடித்த காஸி

* சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com