வாரத்திற்கு ரூ.1,000....பணத்திற்காக பெண் தயாரிப்பாளரை 10 முறை முத்தமிட்ட நடிகர்

தனது வாழ்க்கையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பற்றி நடிகர் கூறினார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான். சொத்துக்கள் மற்றும் திரைப்பட பின்னணி இருந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை.
1993-ல் வெளியான பரம்பரா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் சைப் அலி கான். ஆனால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்கு நீண்ட காலம் ஆனது.
சமீபத்திய ஒரு நேர்காணலில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பற்றி கூறினார். பணத்திற்காக ஒரு பெண் தயாரிப்பாளரை பத்து முறை முத்தமிட்டதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், ''என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் எனக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை ஒரு பெண் தயாரிப்பாளர் செலவுக்கு பணம் கொடுப்பார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார் . நான் அவரது கன்னங்களில் முத்தமிட்டால் மட்டுமே பணம் தருவதாக கூறினார். நான் அவருக்கு 10 முத்தங்கள் கொடுத்து வாரத்திற்கு ரூ.1,000 பெறுவேன் " என்றார்.






