பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு

மூணாறில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு
Published on

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். பல தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தற்போது ஏராளமான வெப்தொடர்களில் நடித்து வருகிறார். அதன் பின்னர் அவர் நடித்த ஒரு பக்க கதை என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம் புதிய தமிழ் வெப்தொடரில் நடித்து வருகிறார். இதற்காக மூணாறு சென்றார். அங்கு ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன் தங்கி இருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் தங்கியிருந்த அறை உணவகக் கட்டணத்தை செலுத்த வில்லை . இதற்கிடையே அறை வாடகை, ஓட்டல் கட்டணம் என்று சேர்த்து மெத்தம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. இந்த பணத்தை கொடுக்காமல் படக்குழுவினர் அறையை காலி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களை வெளியே விடாமல் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பில் கட்டணத்தை செலுத்துவதாக கூறி முழு தொகையையும் செலுத்தினர். அதன் பின்னரே ஊழியர்கள் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com