பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் குஞ்சு முகமது கைது

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இயக்குநர் குஞ்சு முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் குஞ்சு முகமது கைது
Published on

திருவனந்தபுரத்தில் நடை பெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழா சினிமா தேர்வு குழு தலைவராக இருந்தார். அப்போது ஓட்டலில் திரைப்பட விழா வுக்கான சினிமா தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ஒரு பெண் சினிமா கலைஞ ரிடம் குஞ்சு முகம்மது ஓட்டல் அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கேரள முதல்-மந்திரி அலு வலகத்தில் புகார் அளித் தார். இதைத் தொடர்ந்து குஞ்சு முகம்மது மீது திரு வனந்தபுரம் கன்டோன் மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப் பட்ட பெண் சினிமா கலை ஞர் ரகசிய வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள சினிமா இயக்கு னர் பி.டி.குஞ்சு முகம்மது இன்று கைது செய்யப் பட்டார். அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றிருந்த தால் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜரானார். அப்போது அவர் முறையாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீ னில் விடுவிக்கப் பட்டார். திருவனந்தபுரம் கோர்ட்டு குஞ்சு முகம்மதுவை 7 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விசாரணைக்கு ஒத்துழைக்கு மாறு உத்தரவிட்டிருந்தது. விசாரணையின் போது அவர் ஆஜரானார். அவரை விடுவிக்குமாறும் போலீ சாருக்கு கோர்ட்டு உத்தர விட்டு இருந்தது. அதன்படி அவர் கைதானவுடன் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com