திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்

இயக்குனர் வேலு பிரபாகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்று மதியம் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது.
வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். 1989-ல் 'நாளைய மனிதன்' படத்தில் இயக்குநராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன்' என பல படங்களை இயக்கியுள்ளார்.
Related Tags :
Next Story






