இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்

இயக்குனர் வேலு பிரபாகரனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர். 1989-ல் 'நாளைய மனிதன்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






