ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி

நடிகர் ஷாருக்கான் பட காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி
Published on


இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனாவில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வித்தியாசமாக தான் நடித்த திரைப்படங்களில் இருந்து ஐந்து நிமிட காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைலராகிறது. அதோடு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனைகளையும் சொல்லி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் டாக்டரை பாருங்கள். அடுத்தவர்களிடம் இருந்து தனித்திருங்கள். கூட்டமாகச் செல்லாதீர்கள். வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களையோ, உங்கள் முகத்தையோ தொடவேண்டாம். வாகனங்களில் பயணிப்பதை தவிருங்கள். அடிக்கடி கைகளை கழுவுங்கள், உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமல், காய்ச்சல் இருந்தால், மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com