திரைப்பட பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திரைப்பட பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை
Published on

சென்னை,

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

தூரிகை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், "பீயிங் வுமன்" (Being Women) என்னும் இணைய இதழையும் தொடங்கி, நடத்திவந்தார்.

எழுத்தாளராக மட்டுமில்லாமல் தூரிகை, ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com