நடிகை அமலாபால் மீது சினிமா மேக்கப் கலைஞர் புகார்

சினிமா மேக்கப் கலைஞர் ஒருவர் நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை அமலாபால் மீது சினிமா மேக்கப் கலைஞர் புகார்
Published on

வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது:- ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.

அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார். நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம்.

இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன. வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு வேனையெல்லாம் அவரே புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com