

சென்னை,
சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'அறிவு' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளர்.
மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.