

மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக் ஆகியோருடன் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனை தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியர் ‘ஹேப்பி லூப்’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
கடந்த 2024ல் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில், பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களைக் கொண்டு உருவான ‘வாழ’ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த மேனன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியாரின் சகோதரர் மது வாரியர் மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.