“ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராம்சந்திரன் கண்ணன் இயக்குகிறார்.
“ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு
Published on

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து, தற்போது நடிகர் ரியோ ராஜ் "ராம் இன் லீலா" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ராம்சந்திரன் கண்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். கதாநாயகியாக வர்திகா நடிக்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த "ராம் இன் லீலா" படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com