பிருத்விராஜ் – மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய ஹாரர் படம் ‘ஒடியன்’ படப்பிடிப்பு நிறைவு

நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஒடியன் – ஏஜ் ஆஃப் இல்லுஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது
பிருத்விராஜ் – மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய ஹாரர் படம் ‘ஒடியன்’ படப்பிடிப்பு நிறைவு
Published on: 

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் புதிய ஹாரர் திரைப்படமான ‘ஒடியன் – ஏஜ் ஆப் இல்லுஷன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். இவர் தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஒடியன் – ஏஜ் ஆஃப் இல்லுஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ‘ஒடியன்’ என்ற பெயரில் மோகன்லால், மஞ்சு வாரியர் இணைந்து நடித்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது அதே பெயரில் புதிய ஹாரர் திரைப்படம் உருவாகி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

X