லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் 'டிசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் 'டிசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

சமீபத்தில் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'டிசி' என்ற படத்திலும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு டிசி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com