பிரபாஸின் 'பெளசி' பட காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

ரகசியமாகப் படம் பிடிக்கப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபாஸின் 'பெளசி' பட காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி
Published on

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார். இவர் தற்போது சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பெளசி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்தகைய கசிவுகள் திரையரங்கில் ரசிகர்கள் அனுபவிக்க வேண்டிய சுவாரசியத்தைக் கெடுத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. ரகசியமாகப் படம் பிடிக்கப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com