ஒரே நாளில் திரைக்கு வரும் சூர்யா, நயன்தாரா, விஷால் படங்கள்... ’மகுடம்’ சூடப்போவது யார்?

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள படம் 'மகுடம்'
மகுடம்
Published on

சென்னை,

சூர்யா, நயன்தாரா படங்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது விஷாலின் ’மகுடம்’ திரைப்படமும் அதே தேதியை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'மகுடம்'

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள படம் 'மகுடம்' . இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பாக்ஸ் ஆபீஸ் மோதல்

இந்நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதே நாளில், சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் நயன்தாரா - கவின் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

தற்போது இந்த பாக்ஸ் ஆபீஸ் மோதலில் விஷாலின் 'மகுடம்' படமும் இணைய இருப்பது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com