‘‘15 நிமிட ‘கிளைமாக்ஸ்’ நெருப்பு மாதிரி இருக்கிறது’’ -பாண்டியராஜன்

‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தை பார்த்த பாண்டியராஜன், கிளைமாக்ஸ் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார்.
‘‘15 நிமிட ‘கிளைமாக்ஸ்’ நெருப்பு மாதிரி இருக்கிறது’’ -பாண்டியராஜன்
Published on

டைரக்டர்-நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், காதல் முன்னேற்ற கழகம். இதில், கதாநாயகியாக சாந்தினி நடித்து இருக்கிறார். சிங்கம்புலி, கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர்.

மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்றிருப்பவர், மாணிக் சத்யா. படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

1985-களில் நடக்கிற கதை, இது. கதாநாயகன் பிருத்வி ராஜன், நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். ரசிகர் மன்றம், கட் அவுட், பாலபிஷேகம் என்று அலைபவர். சாந்தினி, பள்ளிக்கூட ஆசிரியையாக வருகிறார்.

துரோகத்தில் மிகப்பெரிய துரோகம், நம்பிக்கை துரோகம். அதிலும் நட்புக்குள் நடக்கும் துரோகம் மிக மிக கொடூரமானது என்ற கருத்தை கதையில் பதிவு செய்திருக்கிறோம்.

படத்தை பார்த்த பாண்டியராஜன், 15 நிமிட கிளைமாக்ஸ் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார். சென்னை, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர், ஊட்டி ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள இந்த படம், மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com