'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

’சந்திரமுகி 2’ படத்தின் ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.  லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சந்திரமுகி 2 படம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி சந்திரமுகி 2 படத்தின் முக்கிய கதாபாத்திரமான வேட்டையன் ராஜாவின் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com