கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார்.
இன்று நடிகை கீர்த்தி பாண்டியன் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'அஃகேனம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார்.
Related Tags :
Next Story






