மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நைட் ரைடர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் நவுபல் அப்துல்லா இயக்கத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் 'நைட் ரைடர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நைட் ரைடர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

கொச்சி,

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் கடந்த 2023-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமானார். இதனை அடுத்து இவர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகர் மேத்யூ தாமஸ் அறிமுக இயக்குனர் நவுபல் அப்துல்லா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'நைட் ரைடர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜோதிஷ் எம் மற்றும் சுனு ஏவி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

இந்த படத்தில் அவேஷம் பட நடிகர் ரோஷன் ஷானவாஸ் மற்றும் சரத் சபா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com