எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

சென்னை,

தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது 'கந்தன்மலை' என்ற படத்தில் எச்.ராஜா நடித்துள்ளார். இந்த படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியேர் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. எச்.ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி நிற்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. பிண்ணனியில் கேயிலின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவு தெரிகிறது. அந்த கதவின் வழியாக எச்.ராஜா கூட்டமாக கேவிலுக்கும் நுழைவது போன்ற காட்சி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு போஸட்ரில் நாற்காலியில் கழுத்தில் ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார்

கந்தன் மலை' என்பது கடவுள் முருகனின் கேவில் இருக்கும் மலையை குறிக்கும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றத்தை 'கந்தன் மலை' என்று செல்வார்கள். இதனால் இந்த திரைப்படத்தின் கதை திருப்பரங்குன்றம் முருகன் மலையை அடிப்படையாக கெண்டதாக இருக்குமே? என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com