விதார்த் நடிக்கும் 'டெவில்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

விதார்த் நடிக்கும் 'டெவில்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விதார்த் நடிக்கும் 'டெவில்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
Published on

சென்னை,

ஆதித்யா இயக்கத்தில் நடிகர் விதார்த், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'டெவில்'. மேலும் இந்த படத்தில் ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகிரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com