'குட் நைட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

மணிகண்டன் நடித்துள்ள 'குட் நைட்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'குட் நைட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி உள்ள திரைப்படம் 'குட் நைட்'. 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்டிக் காமெடி வகை படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். 'குட் நைட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, ''குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்'' என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com