ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'பிளாக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஜீவா நடித்துள்ள 'பிளாக்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com