சிவராஜ்குமார் நடிக்கும் 'பெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு

இப்படம் வருகிற ஆகஸ்ட் 28, அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவராஜ்குமார் நடிக்கும் 'பெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு
Published on

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச  கல்யாணம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை 120 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 'ஜெயிலர்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 'ஜெயிலர் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பெயில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கேவின் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம்,சாய் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் வருகிற வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'பெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com