அக்சய் குமாரின் 'கேசரி சாப்டர் 2' - முதல் விமர்சனம் கொடுத்த 'பாகுபலி' பிரபலம்


First review of Akshay Kumar’s Kesari Chapter 2 out now
x
தினத்தந்தி 13 April 2025 2:20 PM IST (Updated: 13 April 2025 4:14 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கேசரி சாப்டர் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் மாதவன், அனன்யா பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளநிலையில், சிறப்பு திரையிடலில் இப்படத்தை பார்த்த பாகுபலி பிரபலம் ராணா டகுபதி முதல் விமர்சனம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்,

"கேசரி 2 ஒரு முக்கியமான படம். அது ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் ஆழமாக பதியும்' என்றார். ராணா டகுபதி இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தெலுங்கில் வெளியிட உள்ளார்.

1 More update

Next Story