'சேயோன்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேயோன்
Published on

மதுரை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

மதுரை பின்னணியில் உருவாகும் கிராமத்து கதை

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படமாக 'சேயோன்' உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதை அம்சம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

இந்த நிலையில், 'சேயோன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன.

வருகிற அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து இந்த ஆண்டுக்குள் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com