‘ஜனநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

எச்.வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
‘ஜனநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அரசியலில் குதித்துள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், 'ஜனநாயகன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் கிடைத்துள்ளது

அதாவது, ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடல் விஜய் குரலில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com