நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாக சைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹெட் அப் ஹை' (Head up High) என்ற பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com