அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

'ரசவாதி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் முதல் பாடல் வெளியீடு
Published on

சென்னை,

மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமார். இவர் தற்போது 'ரசவாதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலாக 'சாரல் சாரல்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை தமன் மற்றும் லட்சுமி மேகனா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரசவாதி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com