விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் முதல் பாடல் வெளியீடு

'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார்.
விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் முதல் பாடல் வெளியீடு
Published on

சென்னை,

நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகு தூரமில்லை'. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள இந்த படத்துக்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, 'ஏன்டி என்ன' என்ற பாடல் வெளியாகி உள்ளது. மைக்கேல் ராஜா எழுதியுள்ள இந்த பாடலை ஸ்டீபன் செக்கரியா மற்றும் மால்வி சுந்தரேசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com