பிளாஷ்பேக் : இளமை நாட்களை நினைவூட்டும் படம்

பிளாஷ்பேக் படம், ரசிகர்களுக்கு அவர்களின் இளமை நாட்களை நினைவூட்டும்.
பிளாஷ்பேக் : இளமை நாட்களை நினைவூட்டும் படம்
Published on

கொரில்லா படத்தை இயக்கிய டான்சாண்டி அடுத்து, பிளாஷ்பேக் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் பிரபுதேவா, ரெஜினா கசன்ட்ரா, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் டான்சாண்டி கூறியதாவது:

படத்தின் தலைப்பைப் போலவே பல காலகட்டங்களில் நடைபெறும் உணர்ச்சிமிக்க கதை. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் போன்ற படங்களை நினைவூட்டும் வகையில், இந்தப் படம் இருக்கும். காதலைப் போலவே காமமும் ஒரு அழகான உணர்வு என்பதுதான் இந்தப் படத்தின் மூலக்கதை.

இது, ரசிகர்களுக்கு அவர்களின் இளமை நாட்களை நினைவூட்டும். படம் சென்னை மற்றும் மலைப்பிரதேசங்களில் வளர்ந்துள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com