

கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டது. கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கினார்.
இப்போது, சண்டக்கோழி2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பின்போது கதாநாயகன் விஷால் மற்றும் டைரக்டர் லிங்குசாமி ஆகிய இருவரும் படக்குழுவினர் 150 பேருக்கும் தனித்தனியாக தங்க நாணயங்களை வழங்கினார்கள். அதோடு அந்த 150 பேருக்கும் விருந்தும் கொடுத்தார்கள்.
கதாநாயகன் விஷால், டைரக்டர் லிங்குசாமி ஆகிய இருவரும் தங்க நாணயம் வழங்கியது படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது.
டைரக்டர் லிங்குசாமி, கேரளாவில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கியிருக்கிறார்.
சண்டக்கோழி2, படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் அக்டோபர் மாதம் ஒரே தேதியில் வெளிவர இருக்கிறது.