

சென்னை
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக, பதவிகளை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் . காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும் . திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர் கூறினார்