ரூ.2,800 கோடிக்கு அதிபதி, கிழிந்த ஷூ அணிவது ஏன்...? நடிகர் சல்மான் கான் பற்றி இளம் நடிகை பேட்டி

நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பின்போது, நடந்த விசயங்களை பற்றி அவருடன் நடித்த நடிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ரூ.2,800 கோடிக்கு அதிபதி, கிழிந்த ஷூ அணிவது ஏன்...? நடிகர் சல்மான் கான் பற்றி இளம் நடிகை பேட்டி
Published on

புதுடெல்லி,

நடிகர் சல்மான் கான் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற திரைப்படம் 2 நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. காமெடி, அதிரடி காட்சிகள் என பல விசயங்கள் இந்த படத்தில் நிறைந்து உள்ளன.

படத்தில், சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஷெனாஸ் கில், ஜஸ்ஸி கில் மற்றும் பலக் திவாரி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் ஆக இந்த படம் தயாராகி உள்ளது. இதனால், சண்டை காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளும் சம அளவில் படத்தில் இடம் பெற்று உள்ளன.

சல்மான் கானுடன் நடித்தவர்களான நடிகை பலக் திவாரி மற்றும் ஜேஸ்சி கில் ஆகியோர் பட விளம்பரத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது இருவரும் அளித்த பேட்டியின்போது, அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் பலரையும் காண்பது போன்று சல்மான் கான் எதார்த்தவாதியாக காணப்பட்டார் என கூறினர்.

படப்பிடிப்புக்கு அவர் கிழிந்து போன ஷூக்களை (காலணிகள்) அணிந்து வருவது வழக்கம் என கூறி பேட்டி எடுப்பவரை சற்று அதிர்ச்சி அடைய வைத்தனர்.

எனினும் அவர்கள் தொடர்ந்து அந்த விசயங்களை நினைவுகூர்ந்து பேசும்போது, உண்மையில் அதிக சம்பளம் வாங்க கூடிய நபராக இருந்தபோதும், அவர் சாதாரண மனிதராகவே நடந்து கொள்கிறார் என கூறியுள்ளனர்.

அவரிடம் ஏன் ஓட்டையான ஒரு ஷூவை அணிந்து வருகிறீர்கள் என பலக் திவாரி கேட்டிருக்கிறார். அதற்கு பதிலாக அவர், என்னிடம் இருக்கிற ஷூக்களிலேயே அதிக சவுகரியம் தர கூடிய ஒன்றாக இது உள்ளது. இதனை விட வேறு எதுவும் எனக்கு நன்றாக இருப்பது போன்று உணரவில்லை என்று கூறியுள்ளார்.

அதனால் நடிகர் சல்மான் கானுக்கு ஸ்டைலை விட வசதியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று பலக் திவாரி கூறியுள்ளார். எனினும், அவர் கொடையாளராகவும் இருக்கிறார். எளிமையான வாழ்வை வாழ்வதும், உதவும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com