ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி

தமிழில் தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல்பிரீத் சிங். தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார்.
ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி
Published on

கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படம் வெற்றி பெற்று அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது மீண்டும் கார்த்தி ஜோடியாக தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் கவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் காரில் இருந்து கவர்ச்சி உடையில் அவர் இறங்கி வரும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த படத்தை பார்த்து பலர் என்ன ஆடை இது? இப்படி கேவலமான உடை அணியலாமா? பேண்ட் அணிய மறந்து விட்டீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். ஒருவர் அவரை கேவலமாக பேசி மோசமான கருத்தை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ரகுல்பிரீத் சிங் பதிலடி கொடுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உன் அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசுவாயா. பெண்களை மதிக்க உன் தாயிடம் அறிவுரை கேட்டு நடந்துகொள். உன்னைப் போன்றவர்கள் இருப்பது வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கு சம உரிமை வழங்குவது என்ற விவாதம் எல்லாம் உதவாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com