பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.
Published on

கொழும்பு,

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தியேட்டர் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே தனது மனைவியுடன் நேரில் சென்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நேரில் பார்த்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவருடன் சில தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து பார்த்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்சேவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com