பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்


Fraud complaint against popular serial actress
x

சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை,

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகாரளித்திருக்கிறார். முதல் கணவருடன் இருக்கும் போதே தன்னை 2-வது திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story