ஜெயில் கஷ்டங்களை சொல்லக்கூடிய படமாக "பிரீடம்" இருக்கும்- சசிகுமார்

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘பிரீடம்’ படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார் ''பீரிடம்'' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருக்கிறார்.
இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
'பிரீடம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் சசிக்குமார் பேசியதாவது " 'பிரீடம்' மனதுக்கு நெருக்கமான படம். ஆர்ட் டைரக்டர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஜிப்ரான் உடன் நாலாவது படம். சிறப்பாக செய்துள்ளார். லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது. மணிகண்டன் எனக்கு சாப்பாடெல்லாம் ஊட்டி விடுவார். ஆண்டனி அவர் கஷ்டத்தையெல்லாம் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார். தயாரிப்பாளர் பாண்டியன் மேனேஜராக தெரியும், முதலில் அவர் தயாரிக்கிறேன் எனச் சொன்னபோது வேண்டாம் என்று சொன்னேன். இல்லை நான்தான் செய்வேன் என்றார். மிக இளகிய மனதுக்காரர் அவரது நம்பிக்கைதான் இந்தப்படம் ரிலீஸ் வரை வந்துள்ளது.
இந்தப்படம் 'டூரிஸ்ட் பேமிலி' மாதிரி காமெடியாக இருக்காது, இது ஜெயிலில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம், ஆடியன்ஸுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும். 1991 ல் நடந்த உண்மைக் கதை. நமக்குத் தெரியாத ஒரு கதை. இப்படி ஒரு படம் எடுத்ததற்குப் பாண்டியனுக்கு நன்றி. இயக்குநர் சத்ய சிவா ஒர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவர் வேலை எனக்குப் பிடிக்கும். அவரது கதையைத் தான் பார்த்தேன். எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். " என்றார்.