

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 4-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“இன்னும் இரண்டே நாட்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஒரு தேர்தல் என்றால் எவ்வளவு கஷ்டம், என்னென்ன எதிர்ப்புகள், என்னெல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது.
நண்பா, நீ ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை, என்னுடைய ஆசை. நான் இதற்கு முன்பெல்லாம் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டிருக்கிறேன் என்பது அந்தந்த கட்சிக்காரர்களுக்கே தெரியும். இந்த முறை என் நண்பன் வர வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.