'இந்தியன் 2 முதல் சர்தார் 2 வரை...'- ஆர்.கே.செல்வமணி அதிர்ச்சி தகவல்

ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சினிமா தொடர்பான அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்
From 'Indian 2' to 'Sardar 2', 20 stuntmen have died in film shooting in last four years, reveals FEFSI president RK Selvamani
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்.கே.செல்வமணி. சமீபத்தில், நடந்த நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இந்தியன் 2 முதல் தற்போது உருவாகி வரும் சர்தார் 2 வரை கடந்த 4 வருடங்களாக 20 ஸ்டண்ட் மேன்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும், சிலர் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள். படப்பிடிப்பில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் காயமடைந்தவர்களுக்கு உதவ பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன, 'என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

'பட புரொமோஷனில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அது நமது கடமை. அஜீத், நயன்தாரா மட்டுமின்றி ஒவ்வொரு சினிமா நட்சத்திரங்களும் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமா தற்போது மோசமான நிலையில் இருக்கிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், முன்னணி நடிகர்கள் இணைந்து தொழில் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்,' என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com