நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு கால சினிமா பயணம்


நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு கால சினிமா பயணம்
x
தினத்தந்தி 29 May 2025 11:18 AM IST (Updated: 30 May 2025 10:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ராஜேஷ் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை,

1949- ல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ராஜேஷ் பிறந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் மேற்படிப்புக்கு சேர்ந்தார். கல்லூரி முடிப்பை பல்வேறு காரணங்களால் இவர் முடிக்கவில்லை. பின்னர், புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பள்ளி ஆசிரியர் பணியை துறந்து சினிமாவில் நடித்தார். 1974-ல் கே.பாலசந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித் திரையில் அறிமுகமான முதல் படம் இது. "கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை" உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்துவிட்டார். திவ்யா, தீபக் என்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜேஷ் உயிர்ழந்தார். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story